BREAKING NEWS *** டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி; டெல்லி ராஜ் நிவாஸில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார் *** அதிக லாப ஆசையால் ஆன்லைனில் ரூ13 லட்சத்தை இழந்த பரிதாபம் !

ஆசிரியர் :


 

அதிக லாப ஆசையால் ஆன்லைனில் ரூ13 லட்சத்தை இழந்த பரிதாபம் !

திருச்சி அரியமங்கலம் உக்கடை  மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் (49) .இவர் முகநூலில் அதிக லாபம் கிடைக்கும் என விளம்பரத்தை பார்த்து அந்த வாட்சப் எண்ணில் இவருடைய எண்ணை இணைத்திருக்கிறார் .




அதன்படி ரூ 13,15,500/- ஐ முதலீடு செய்தார் . இந்த முதலீட்டுக்கு அதிக லாபம் கொடுக்கவில்லை மேலும் அவரது எண்ணுக்கு ஒரு பெண் தொடர்பு கொண்டு இன்னும் ரூ 40 லட்சம் கொடுத்தால் அதை இரட்டிப்பாக்கி தருகிறேன் என ஆசை வார்த்தை கூறியிருக்கிறார் . அதற்க்கு இவர் மறுக்கவே அந்த பெண் தொடர்பை துண்டித்திருக்கிறார் .  பின்னர் அந்த எண்ணை தொடர்புகொள்ள முடியவில்லை .

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சந்திரசேகர் இதுபற்றி சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார் . அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் மோசடி கும்பலை தேடிவருகின்றனர் 

Post a Comment

0 Comments