BREAKING NEWS *** டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி; டெல்லி ராஜ் நிவாஸில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார் *** டாஸ் அறக்கட்டளை சார்பில் சின்ன சூரியூர் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு !

ஆசிரியர் :


 

டாஸ் அறக்கட்டளை சார்பில் சின்ன சூரியூர் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு !

டாஸ் அறக்கட்டளை சார்பில் சின்ன சூரியூர் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில்10 நாட்டு இனச் செடிகள்  நடும் நிகழ்வு  நடைபெற்றது . 




முன்னதாக டாஸ் அறக்கட்டளை நிர்வாகி கூறியதாவது ....

 சின்ன சூரியூர் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 10 நாட்டு இனச் செடிகள் நடும் உன்னத முயற்சியில் இறங்கினோம்.



சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் சமூக நலனுக்கான எங்கள்  நாட்டு இன மரங்களை நடுவதன் மூலம், பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துதல், காலநிலை மாற்றத்தைத் தணித்தல் மற்றும் நமது சுற்றுப்புறச் சூழலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளோம். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்த சிந்தனையை இளம் தலைமுறையினரின் மனதில் விதைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதை அரசுப் பள்ளியில் தேர்வு செய்தோம். 

மேலும்  இது நமது இயற்கை பாரம்பரியத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றியது மற்றும் வரவிருக்கும் தலைமுறைகளுக்கு பசுமையான எதிர்காலத்தை வளர்ப்பது பற்றிய சிறப்புகளை எடுத்து கூறினார் . 



வேம்பு மரம், புன்னை மரம், பூவரசன் மரம் ,ஆழ மரம் ,சர கொண்ரை, புங்கன் மரம் , மழை வேம்பு, அரச மரம், இலுப்பை மரம், மகிழ மரம் ஆகிய மரக்கன்றுகள் நடப்பட்டது . 




இந்த நிகழ்ச்சியில் டாஸ் அறக்கட்டளை உறுப்பினர்கள், டாஸ் அறக்கட்டளையில் தற்போது பயிற்சி பெற்றுவரும் திருச்சி நாளந்தா கல்லூரியின் வேளாண்துறை மாணவிகள் கலந்து கொண்டனர்.


****

L.பாபு

திருச்சி செய்தியாளர் 



Post a Comment

0 Comments