BREAKING NEWS *** கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற பிகாரை சேர்ந்த பிபின் மஞ்சுவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் சிறையில் அடைக்க திருவள்ளூர் போக்சோ நீதிமன்ற நீதிபதி உத்தரவு *** திருச்சி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் புத்தக திருவிழா தொடக்கம் !

ஆசிரியர் :


 

திருச்சி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் புத்தக திருவிழா தொடக்கம் !

திருச்சி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் நடைபெற்ற திருச்சி புத்தகத் திருவிழாவை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு , பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்துவைத்தார்கள்.




நிகழ்ச்சியின்போது கவிஞர் நந்தலாலா எழுதிய ”திருச்சி ஊறும் வரலாறு” என்ற நூலை வெளியிட்டு அமைச்சர் கே.என்.நேரு சிறப்புரையாற்றினார். இதைத்தொடர்ந்து வாசகர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள புத்தகக் கண்காட்சியின் ஒவ்வொரு அரங்குகளையும் பார்வையிட்டு அதன் ஏற்பாட்டாளர்களுக்கு பாராட்டு தெரிவித்தார் .




இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் சட்டமன்ற உறுப்பினர்கள் அ.சௌந்தரபாண்டியன், செ.ஸ்டாலின்குமார், ப.அப்துல்சமது, திருச்சி மாநகர மேயர் மு.அன்பழகன், துணைமேயர் ஜி.திவ்யா, ஆகியோருடன் அரசு அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோருடன் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments