தமிழக வெற்றி கழகத்தின் நிறுவன தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜயின் பிறந்தநாள் விழா வருகிற ஜூன் 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக வெற்றி கழகத்தினர் தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் விஜயின் பிறந்தநாள் விழாவை முன்கூட்டியே கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளராக இருந்த முன்னாள் அரசு வழக்கறிஞர் எட்வின் ஜெயக்குமார் தமிழக வெற்றிக் கழகத்தில் கட்சியின் மூத்த நிர்வாகியும், அமைச்சருமான செங்கோட்டையனை நேரில் சந்தித் து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து கொண்டார்.இதை யடுத்துதமிழக வெற்றி கழகத்தின் காவிரி டெல்டா மண்டல பொறுப்பாளரும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய தலைவருமான குப. கிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதையடுத்து திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ராமச்சந்திரா நகரில் முன்னாள் அரசு வழக்கறிஞர் எட்வின் ஜெயக்குமார் ஏற்பாட்டில் திருச்சி மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில்
தமிழக வெற்றி கழகத்தின் மாநகர் மாவட்ட தலைவர் செந்தில் கலந்து கொண்டு மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களுக்கு இலவச புடவை மற்றும் நலத்திட்ட உதவிகளையும் ,பொது மக்களுக்கு அன்னதானத்தையும் தொடங்கி வைத்தார்
நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட துணை செயலாளர் ஆனந்தகுமார்,பஞ்சப்பூர் பகுதி செயலாளர் சங்கர்,பஞ்சபூர் பகுதி இணை செயலாளர் கண்ணன், வார்டு வட்ட செயலாளர்கள் மணிகண்டன், சண்முகம், வல்லரசு, ரமேஷ் மற்றும் தமிழக ஜனதா தளத்தின் மாநில செயலாளர் அறிவழகன், மாநில துணைத் தலைவர் எஸ் ஆர் ஆறுமுகம்,
தமிழக ஜனதா தளம் மாநகர் மாவட்ட தலைவர் அருண்குமார், துணைத் தலைவர் முருகானந்தம் இளைஞரணி செயலாளர் ராகுல் மற்றும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் நித்திஷ், வைத்தி,கேகே நகர் சுரேந்தர், யோகேஷ் , குமார்,இளையராஜா, முருகேஷ் பிரவீன், இந்திரா, அஜய்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்





0 Comments