BREAKING NEWS *** சசிகாந்த் செந்திலின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆதரவு! *** மணப்பாறையை அடுத்த தேனூரில் மாணவ மாணவிகளுக்கு இலவச கல்வி உபகரணங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார் !

ஆசிரியர் :


 

மணப்பாறையை அடுத்த தேனூரில் மாணவ மாணவிகளுக்கு இலவச கல்வி உபகரணங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார் !

 

மணப்பாறையை அடுத்த தேனூரில் வேர்ல்டு விஷன் இந்தியா என்ற அமைப்பின்  சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  இதில் கலந்து கொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச கல்வி உபகரணங்களை 1.30 லட்சம் மதிப்பில் வழங்கி சிறப்பித்தார். இதேபோல தேனூரை தூய்மையான மாதிரி கிராமமாக மாற்றும் முயற்சியில் அங்குள்ள குடும்பங்களுக்கு 1.76 லட்சம் மதிப்பில் மூன்று வகையான குப்பைத் தொட்டிகளை வழங்கினார் .இதேபோல மருங்காபுரி ஒன்றியத்தில்138  கிராமங்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை  கொடியசைத்து தொடங்கி வைத்தார். 




இந்நிகழ்ச்சியில்  மணப்பாறை எம்எல்ஏ அப்துல் சமது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments