BREAKING NEWS *** டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி; டெல்லி ராஜ் நிவாஸில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார் *** திருச்சி வயலூர் ரோடு குமரன் நகரில் கே. எம்.எஸ். ஹக்கீம் கல்யாண பிரியாணி ஹோட்டலை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார் !

ஆசிரியர் :


 

திருச்சி வயலூர் ரோடு குமரன் நகரில் கே. எம்.எஸ். ஹக்கீம் கல்யாண பிரியாணி ஹோட்டலை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார் !

 

திருச்சி வயலூர் ரோடு குமரன் நகரில் கே.எம்.எஸ் கல்யாண பிரியாணி ஹோட்டல் அதிநவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு, அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. 



விழாவிற்கு திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். சி.எஸ்.ஐ பிஷப் சந்திரசேகரன், திருவரங்கம் எம்.எல்.ஏ பழனியாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 ஹோட்டலை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்  கே.என்.நேரு திறந்து வைத்தார். முதல் விற்பனையை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு தொடங்கி வைத்தார்.



விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத்தலைவரும், கே.எம்.எஸ்.கல்யாண பிரியாணி குழுமத்தின் நிறுவன தலைவருமான கே.எம்.எஸ். ஹக்கீம் வரவேற்று  நன்றி கூறினார்.

இந்த திறப்பு விழாவில்  தொழிலதிபர்கள், வியாபார சங்க நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments