BREAKING NEWS *** டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி; டெல்லி ராஜ் நிவாஸில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார் *** திருச்சி இபுதூர் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்!

ஆசிரியர் :


 

திருச்சி இபுதூர் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்!

 


திருச்சி  இபுதூர் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் சர்வதேச யோகா தின விழா கடைபிடிக்கப்பட்டது. இபுதூர் மாநகராட்சி தொடக்கப் பள்ளி  தலைமை ஆசிரியர் புஷ்பலதா தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக முனைவர் சதீஷ்குமார் பங்கேற்றார். 




சிறப்பு விருந்தினராக அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர்  யோகா ஆசிரியர் விஜயகுமார் பங்கேற்று பள்ளி மாணவ மாணவிகளுக்கு யோகாசனம், தியான பயிற்சி அளித்து பேசுகையில், சர்வதேச யோகா தினம்  2014 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, ஆண்டுதோறும் ஜூன் 21அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது . பண்டைய இந்தியாவில் உருவான யோகக் கலை மூலம் உடல், உள ஆரோக்கிய நடைமுறையை உலகளவில் மேம்படுத்துவது ஐக்கியநாடு சபையால் முக்கியமானதாகக் கருதப்பட்டது .



இந்தியாவின் பாரம்பரிய கலையான யோகக் கலையினை இந்திய பிரதமர் நரேந்திர மோடி முயற்சியால் ஐக்கிய நாடு சபையில் இந்தியா கொண்டு வந்த தீர்மானம் ஏற்கப்பட்டு 177 நாடுகள் தீர்மானத்தை அங்கீகரித்தது. ஐக்கிய நாடு சபையால் 2014 ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது. 2015 ஆம் ஆண்டு முதல் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அஷ்டாங்க யோகாவில் இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்ற  படிநிலைகள் உள்ளன. யோக கலை பயிற்சியினை பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவரும் மேற்கொள்வதால் பள்ளி  மாணவர்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும்.   வாழ்க்கையில் ஒவ்வொருவரும் அறம் சார்ந்து வாழ வேண்டும் என்றார். 



முன்னதாக ராஜஷீலா வரவேற்க,  நிறைவாக சாவித்திரி நன்றி கூறினார்

**********

L.பாபு 
தலைமை செய்தியாளர் 

Post a Comment

0 Comments