BREAKING NEWS *** டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி; டெல்லி ராஜ் நிவாஸில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார் *** விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு காவல்துறையினரால் வீட்டுகாவலில் சிறை வைப்பு !

ஆசிரியர் :


 

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு காவல்துறையினரால் வீட்டுகாவலில் சிறை வைப்பு !


தமிழகம் முழுவதும் ஒன்றிய அளவில் உள்ள வேளாண்மை துறை அலுவலகத்தில் பணியாற்றும் வேளாண்மைத்துறை, தோட்டக்கலை துறை உதவி வேளாண் அலுவலர் (AAO) குறைந்தது 15 வருவாய் கிராமங்களுக்கு மேல் ஒதுக்கீடு செய்து பணியாற்றி வருகின்றனர், அவ்வாறு இருப்பதால் விவசாயிகள் அரசின் நலத்திட்டங்கள், வேளாண் பயன்கள், நன்மைகள் குறித்து பயனடைய முடியாமல் உள்ளனர். ஒவ்வொரு உதவி வேளாண் அலுவலர் (AAO) அவர்களை இரண்டு கிராமங்களுக்கு ஒதுக்கீடு செய்து சிறப்புடன் விவசாயிகளுக்கு பணியாற்ற கோரியும், குத்தகை விவசாயி தான் குத்தகை செய்யும் நிலத்தில் நெல், வாழை, கரும்பு, எள் போன்றவை சாகுபடி செய்தால் தான் தனது வாழ்வாதாரத்தையும், விவசாயத்தியும் காக்க முடியும் என்று தமிழ்நாடு வேளாண்மை துறையே கூறுகிறது, 



ஆனால், திருச்சி  வருவாய் நீதிமன்ற நீதிபதி செல்வராஜ் அவர்கள் குத்தகை விவசாயிகள் நெல் சாகுபடி மட்டுமே செய்ய வேண்டும், வேறு எந்த பயிறும் சாகுபடி செய்ய கூடாது என்று கூறி, அவ்வாறு இல்லை எனில் குத்தகை  பதிவேட்டில் இருந்து ரத்து செய்துவிடுவேன் என்று உத்தரவிட்டு ரத்து செய்து வருகின்றார், இதனால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமலும், வாழ்வதாரத்தை இழந்து வருகின்றனர்,

எனவே நியாயமா.. நியாயமா.. விவசாயிகளுக்கு அநீதி வழங்கும் வருவாய் நீதியரசரை பணி நீக்கம் செய்ய கோரியும் சென்னையில் 20.06.2024 வியாழக்கிழமை இன்று அனைத்து விவசாய சங்க தலைவர்கள் ஒன்றிணைந்து கூட்டம் நடத்தி, முதலமைச்சரிடம் மனு அளிக்க இருந்த நிலையில்  தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் P. அய்யாக்கண்ணு BABL அவர்கள் உயர்நீதிமன்ற உத்தரவில் அவர் இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், பேசலாம், போராடலாம் என்று உத்தரவு இருந்தும், சென்னை செல்ல இருந்த விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு அவர்களையும், சக விவசாயிகளையும் சென்ற காரை மறித்து காவல்துறையினர் அழைத்து வந்து உறையூர் அருணா தியேட்டர் பேருந்து நிறுத்தத்தில் உள்ள முகூர்த்தம் திருமணம் மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர். அங்கவே அவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.





*****

L.பாபு
தலைமை நிருபர் 

Post a Comment

0 Comments