BREAKING NEWS *** `My TVK' செயலியை அறிமுகம் செய்து தவெக-வின் 2ம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் விஜய் *** 10 வது சர்வதேச யோகா தினம் திருச்சியில் நடைபெற்றது !

ஆசிரியர் :


 

10 வது சர்வதேச யோகா தினம் திருச்சியில் நடைபெற்றது !


யோகதா  சத்சங்க  சொசைட்டி ஆப் இந்தியா என்பது ஒரு மதச்சார்பற்ற,  இலாபநோக்கற்ற நிறுவனம். இதன் சார்பாக 10 வது சர்வதேச யோகா தினம் திருச்சியில்   ஜூன் 16 உறையூர் ஜி. கே. எம் மஹால் மற்றும் ஜுன் 17 அரங்கன் அரங்கம் மண்டபம், மாம்பழ சாலையில்   சிறப்பாக நடைபெற்றது. 





இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பலன் அடைந்தனர்.  பங்கேற்பாளர்களுக்கு இலவச அனுமதி மற்றும்  வாழும் கலை என்ற புத்தகமும் வழங்கப்பட்டன.  அறியாமையே மனிதர்களின் துன்பத்திற்கு காரணம். கிரியா யோகம்எனப்படும் விஞ்ஞான ரீதியான புனித உத்தியின் மூலம்   மனிதர்களை காப்பாற்றுவது தான் இதன்ஒரே நோக்கமாகும். 



இந்தப் பயிற்சி இலவசமாகதிருச்சியில் உய்யக்கொண்டான் திருமலை, உறையூர், திருவானைக்காவல், திருவரம்பூர், கே. கே. நகர் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. 



****

L.பாபு 
தலைமை நிருபர்





Post a Comment

0 Comments