BREAKING NEWS *** `My TVK' செயலியை அறிமுகம் செய்து தவெக-வின் 2ம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் விஜய் *** 'என் குப்பை என் பொறுப்பு' திருச்சி மாநகராட்சி 'நகரங்களின் தூய்மைகான மக்கள் இயக்கம்' சார்பில் 28 வது வார்டில் தூய்மை படுத்தும் பணி!

ஆசிரியர் :


 

'என் குப்பை என் பொறுப்பு' திருச்சி மாநகராட்சி 'நகரங்களின் தூய்மைகான மக்கள் இயக்கம்' சார்பில் 28 வது வார்டில் தூய்மை படுத்தும் பணி!

தமிழக அரசின் 'என் குப்பை என் பொறுப்பு' திருச்சி மாநகராட்சி 'நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்' சார்பில் 28 வது வார்டு ஜல்லிக்கட்டு சிலை பூங்கா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றி தூய்மை படுத்தும் பணி மண்டலம் 5 ன் தலைவர் திருமதி விஜயலெக்ஷ்மி கண்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.





உதவி ஆணையர் (பொ), இளநிலை பொறியாளர்கள், சுகாதார நல அலுவலர்கள், 28 வது வார்டு மாநகராட்சி உறுப்பினர் பைஜ் அஹமது பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள், தன்னார்வலர்கள் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



நிகழ்ச்சியில் மண்டல 5 ன் தலைவர் கொடியசைத்து தொடங்கி வைத்த சைக்கிள் விழிப்புணர்வு பேரணி ஜல்லிக்கட்டு சிலை, அண்ணாநகர் பிரதான சாலை, சாஸ்திரி ரோடு, கோஹினூர் சிக்னல், சாலை ரோடு, தில்லை நகர், தென்னூர் ஹைரோடு, பட்டாபிராமன் ரோடு வழியாக உழவர் சந்தை அருகில் நிறைவு பெற்றது. மாமன்ற உறுப்பினர்கள் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments