BREAKING NEWS *** டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி; டெல்லி ராஜ் நிவாஸில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார் *** திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் பொதுமக்கள் தவறாமல் வாக்களிக்கும் வகையில் குறும்பட காணொளியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்று !

ஆசிரியர் :


 

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் பொதுமக்கள் தவறாமல் வாக்களிக்கும் வகையில் குறும்பட காணொளியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்று !

 திருச்சி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் பொதுமக்கள் தவறாமல் வாக்களிக்க வலியுறுத்தும் விதத்தில் பல்வேறு வகைகளில் தேர்தல் ஆணையம் சார்பில்  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது   திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் பொதுமக்கள் தவறாமல் வாக்களிக்கும் வகையில் திருச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவருமான  பிரதீப்குமார் இ. ஆ.ப அவர்கள் தலைமையில் அதிகாரிகள்  பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை செய்தனர்.



 திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் நடித்த வாக்காளர் விழிப்புணர்வு குறும்பட காணொளி படமாக்கப்பட்டது இக்குறும்பட காணொளியில் பள்ளி மாணவிகள் அன்சிகா , யோகம்பாள், சம்ரித்தா, நித்யஸ்ரீ பிளசி,பிரவினாஜோன் ஷர்லின் ஜெசிகா பிரெய்சி,மற்றும் மாணவர்கள் ஜோஷுவா, ரகுமான்,சாய்,வினோஜோஸ் வெ ஜூன் நிக்சன் கெவின் அபிமன்யு பிராங்க்ளின் சர்வேஷ்வரா ஜேம்ஸ் ஜெரால் மற்றும் பிரபல திரைப்பட  நடிகர் சாப்ளின் பாலு உள்ளிட்டோர் நடித்திருந்தனர் இக்காணொளியானது தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எடுக்கப்பட்டதாகும்.






இவ்விழிப்புணர்வு குறும்பட காணொளி  சமூக வலைதளங்களான வாட்சப் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் ஒளிபரப்பு செய்யப்பட்டது இக் காணொளியை தேசிய விருது பெற்ற குறும்படத்தின் நடிகரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியூமான ஆர். ஏ. தாமஸ் அவர்கள் இயக்கத்தில் அவருடைய குழுவினர் படமாக்கினர் இக் காணொளியில் ஒளிப்பதிவு மற்றும் எடிட்டராக  குமார் தங்கவேல்  *இணை இயக்குனராக  சரண் சாமுவேல்

இணை இயக்கம் மற்றும் உதவி எடிட்டிங் ஆரோன் சாமுவேல் இசை ஹவர்ட் மைக்கேல் பிண்ணனி இசை உதவி நேதாஜி படப்பிடிப்பு உதவி ஆர்ம்ஸ்ட்ராங் ராபி டப்பிங் ஜசக் வெளிப்புற படப்பிடிப்பு உதவி அலெக்சாண்டர் ஜோஷுவா உதவியாளர் ரிதிஷ் மேக்கப் மற்றும் காஸ்ட்யூம் ஹப்சி சத்தியாராக்கினி மற்றும் அல்லி கொடி ஆகியோர் செய்தனர்.





இக்காணொளியை இயக்கிய இயக்குனர் நடித்த பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பணிபுரிந்த தொழில் நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருச்சி மாவட்ட  ஆட்சித்தலைவரும் தேர்தல் நடத்தும் அதிகாரியூமான  மா.பிரதீப்குமார் இ.ஆ.ப அவர்கள்  தேர்தல் ஆணையம் சார்பில் பாராட்டு சான்று விருதினை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார் இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் மற்றும் மாணவ மாணவிகளின் பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments