BREAKING NEWS *** டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி; டெல்லி ராஜ் நிவாஸில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார் *** திருச்சி புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்ச்சி !

ஆசிரியர் :


 

திருச்சி புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்ச்சி !

 போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி 26 6 2024 அன்று காலை 11:30 மணியளவில் திருச்சி புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.









இந்நிகழ்ச்சி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு  மற்றும் சில்ரன் சாரிடபிள் டிரஸ்ட் இணைந்து நடத்தப்பட்டது.

ஒருங்கிணைப்பாளர் ராபின்சன் வரவேற்புரை  வழங்கினார் அதனை தொடர்ந்து வாழ்த்துரை அருள் பணி ஜோசப் ஆங்கில வழி கல்வி பொறுப்பாளர்  திருமதி .ஸ்ரீ வித்யா சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் மாவட்ட குழந்தை பாதுகாப்பாக அவர்கள் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு செயல்பாடுகள் பற்றி எடுத்துக் கூறினார்.




சிறப்புரை திரு ரோகித் மனநல ஆலோசகர் சன் ரைஸ் பவுண்டேஷன் அவர்கள் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் பற்றியும் அதன் வழியாக ஏற்படக்கூடிய மனநல பாதிப்பு உடல் ரீதியான பாதிப்பை பற்றி எடுத்துக் கூறினார் அதனைத் தொடர்ந்து திருமதி சுப்புலட்சுமி ஆய்வாளர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் தடுப்பு அவர்கள் போதைப் பொருளை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் அதனால் ஏற்படும் சட்ட சட்ட பிரச்சனையும் தண்டனைகளையும் மற்றும் இலவச உதவி என்னைப் பற்றி எடுத்துக் கூறினார்வாழ்த்துறையாக திருமதி அஜந்தா உறுப்பினர் இளைஞர் நீதி குழு அவர்கள் சிறுவயதில் நமக்கு ஏற்படும் இந்த போதை பழக்கத்தால் நமது வாழ்க்கை எவ்வாறு தடுமாறுகிறது என்பதை பற்றி எடுத்துக் கூறினார்.

 நன்றி உரையாக திரு பி முத்துமாணிக்கம் நிறுவனம் சாரா பாதுகாப்பு அலுவலர் மாவட்ட குழந்தை பாதுகாப்பானது அவர்கள் மாவட்ட ஆட்சியர் கூறிய ஒரு நாள் ஆட்சியராக அமரக்கூடிய வாய்ப்பு நமது எத்தனை மாணவர்களுக்கு உள்ளது என்பதையும் அதை நாம் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் அதனால் நம் தகவலை எவ்வாறு தர வேண்டும் என்பதை பற்றியும் எடுத்துக் கூறி வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறி இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் 500 நபர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

இந்நிகழ்ச்சியை  ராபின்சன் ஒருங்கிணைத்தார்


****

L பாபு 

தலைமை செய்தியாளர் 

Post a Comment

0 Comments