BREAKING NEWS *** டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி; டெல்லி ராஜ் நிவாஸில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார் *** சக்தி யோகாலயா மற்றும் பிராணா சைன்ஸ் இணைந்து "இயற்கை மருத்துவத்தின் அறிவியலும் பயில்முறையும்" என்ற பயிற்சிப்பட்டறை நிகழ்வு !

ஆசிரியர் :


 

சக்தி யோகாலயா மற்றும் பிராணா சைன்ஸ் இணைந்து "இயற்கை மருத்துவத்தின் அறிவியலும் பயில்முறையும்" என்ற பயிற்சிப்பட்டறை நிகழ்வு !

 சக்தி யோகாலயா மற்றும் பிராணா சைன்ஸ் இணைந்து பெருமையுடன் வழங்கிய "இயற்கை மருத்துவத்தின் அறிவியலும் பயில்முறையும்" என்ற பயிற்சிப்பட்டறை இனிதே சிறப்பாக நடைபெற்றது.





இந்த யோகக் கலையை ஒரு சேவை நோக்குடன் தன் தாய்நாட்டில் சிறப்புற எடுத்து நடத்தி வருகின்றனர்,  சக்தி யோகாலயா நிறுவனர் மற்றும் இயக்குநர் .இளையராஜா மற்றும்  திருமதி கவிதா இளையராஜா தம்பதியினர். "உன் வாழ்க்கையில் விடாமுயற்சி செய்தால் இதைப்போலவே நீயும் வெற்றியடைவாய்..!" என்பதற்கு உதாரணமாக விளக்குபவர்கள் இவர்களே!




"வாய்ப்புக்காக காத்திருக்காதே உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக்கொள்" என்ற வரிகளுக்கு உதாரணமாக திகழும் தென் கரோலினாவின் மருத்துவம் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி விஞ்ஞானியாக 12 வருடங்கள் பணியாற்றி, உயிரி வேதியியலில் Ph.D பட்டம் பெற்ற திரு. Dr. சுந்தர் பாலசுப்ரமணியன் அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு திருமூலர் பிராணாயாமா பயிற்சி வகுப்புகள் நடத்தினார்.


மூன்றாவது கண் எனப்படும் ஊழ்கப் பயிற்சியை அடையப்பெற்று, அமெரிக்காவில் ஆராய்ச்சியாளராகவும், சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திலும் பணியாற்றிய திரு .Dr. தங்கமணி நித்யானந்தம் அவர்களும், இயற்கை நல அறிவியல் ஆசிரியர் முனைவர். சந்தோஷ் குமார் மணி அவர்களும் பன்முகத் திறமையாளராக, மனிதம் காக்க மாதவம் செய்யும் மதிப்புமிகு Dr. தங்க பிச்சையப்பா அவர்களும் சக்தி யோகாலயாவின் குடும்ப உறுப்பினரும், தலைமை ஆசிரியருமாகிய திரு. சைவராஜ் அவர்களும் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.


ராக்ஃபோர்ட் நரம்பியல் மையம் Dr. வேணி அவர்கள், vassantham builders Er. வெங்கடேசன்  அவர்கள், ஶ்ரீ ஜெய ரங்கா மருத்துவமனை Dr. சுகுமார் அவர்களும்  பக்கபலமாக  இருந்து விழா சிறப்புற உதவி புரிந்தனர்.


மேலும் பட்டறைக்கு யோகா ஆசிரியர்கள், டாக்டர்கள், பிராணாயாமம், பயிற்றுனர்கள், பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்ததோடு, யோகக் கலையின் பயனையும் அடைந்தனர்.


***
L.பாபு 
திருச்சி மாவட்ட செய்தியாளர் 

Post a Comment

0 Comments