BREAKING NEWS *** டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி; டெல்லி ராஜ் நிவாஸில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார் *** திருச்சி மண்ணச்சநல்லூரில் அடுத்தடுத்த வீடுகளில் 40-பவுன் நகை 6-லட்சம் பணம் திருட்டு !!!

ஆசிரியர் :


 

திருச்சி மண்ணச்சநல்லூரில் அடுத்தடுத்த வீடுகளில் 40-பவுன் நகை 6-லட்சம் பணம் திருட்டு !!!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகிலுள்ள கே வி ஜி நகரை சேர்ந்தவர் அங்கப்பன் (60). இவர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலைத்தில் கடந்த 39 வருடமாக அசிஸ்டன்ட் மேனேஜராக பணியாற்றி கடந்து வருடம் ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் தனது ஓய்வு காலத்தை மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கேவிஜி நகரில் புதிய வீடு வாங்கி அங்கப்பன் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி(50) இருவரும் வசித்து வருகின்றனர். மேலும் இவர்களின் மகன் மதுபாலன்(35) திருமணமாகி சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.இதையடுத்து கடந்த மே 9 ம் தேதி மதுபாலன் குழந்தைக்கு மொட்டை அடித்து காது குத்து நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி அங்கப்பன் மற்றும் விஜயலட்சுமி இருவரும் கடந்த 7ம் தேதி சென்னைக்கு சென்றுள்ளார்.



அதனைத்தொடர்ந்து நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர்  மகன் மதுபாலன் வீட்டில் இருவரும் தங்கியிருந்தினர். இந்நிலையில் இன்று காலை மண்ணச்சநல்லூர் கேவிஜி பகுதியில் உள்ள அவரது வீட்டின் அருகாமையில் உள்ள பக்கத்துவீட்டுகாரர் சரவணன் (33) என்பவர் மதுபாலனுக்கு போன் செய்து வீடுகளின் பூட்டை உடைக்கப்பட்டு திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். தகவல் அறிந்த அங்கப்பன், விஜயலட்சுமி மற்றும் மதுபாலன் மூவரும் சென்னையில் இருந்து வந்து மண்ணச்சநல்லூர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு திகைத்து நின்றனர். பின்னர் பீரோவில் சென்று பார்த்த பொழுது அதிலிருந்த 33 பவுன் நகை மற்றும் 70 ஆயிரம் பணம் திருட்டு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அதனைத்தொடர்ந்து அவரது வீட்டின் அருகாமையில் உள்ள சரவணன் (33) எனபவர் வீட்டில் வீட்டிலும் பூட்டு உடைக்கப்பட்டு அலமாரியில் வைத்திருந்த 4.67 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி உள்ளனர். மேலும் சம்பவம் குறித்து இரு வீட்டாரும் மண்ணச்சநல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர் இதில் மோப்ப நாய் மோப்பம் பிடித்து வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தூரம் சென்றது. இதையடுத்து இரு வீட்டிலும்  கிடைத்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் ரகுராம் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா ஆய்வு செய்து வீட்டு பூட்டை உடைத்த திருடிய கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Post a Comment

0 Comments