BREAKING NEWS *** டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி; டெல்லி ராஜ் நிவாஸில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார் *** பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு பிரசாரம் !

ஆசிரியர் :


 

பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு பிரசாரம் !

 

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.அருண் நேரு லால்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புள்ளம்பாடி ஒன்றியத்தில் கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரித்தார்.அப்போது திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து திமுக முதன்மை செயலாளரும்,தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சருமான கே. என்.நேரு பிரச்சாரம் செய்தார்.



பிரசாரத்தில் திருச்சி திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, லால்குடி சவுந்தரபாண்டியன் எம்எல்ஏ,காங்கிரஸ் கட்சி வடக்கு மாவட்ட தலைவர் கலை, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெய்பிரகாஷ்,புள்ளம்பாடி ஒன்றிய திமுக செயலாளர்கள் இளங்கோவன், செல்வராசா, மற்றும் சக்திவேல் , சண்முகநாதன், ஒன்றிய குழு தலைவர்கள் ரசியா கோல்டன் ராஜேந்திரன், லால்குடி ரவிச்சந்திரன் , நகர்மன்ற தலைவர் துரைமாணிக்கம், மாவட்ட கவுன்சிலர்கள் ஜெயலட்சுமி கருணாநிதி, பாலவினோதினி செந்தில், ஆதிநாயகி ரவி, நகர செயலாளர்கள் கல்லக்குடி பால்துரை,புள்ளம்பாடி முத்துக்குமார்,மதிமுக துரையரசன்,விடுதலை சிறுத்தைகள் கட்சி விடுதலைஇன்பன், விஜயகுமார், ஒன்றிய கவுன்சிலர்கள்,ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள், கிளைக் கழக பொறுப்பாளர்கள் மற்றும் கிராம பகுதி பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


முன்னதாக புள்ளம்பாடி ஒன்றியம் முதுவத்தூர் கிராமத்தில் ஆணையடியான் கோவிலில் சாமி கும்பிட்டு பிரச்சாரத்தை தொடங்கி, தொடர்ந்து மேலரசூர், கீழரசூர்,ஒரத்தூர்,எம். கண்ணனூர்,மால்வாய், சரடமங்கலம்,நம்புகுறிச்சி, சிறுகளப்பூர்,தெரணிபாளையம்,ஊட்டத்தூர், நெய்குளம்,கண்ணாக்குடி, பிகே.அகரம்,குமுளூர், ரெட்டிமாங்குடி,பு.சங்கேந்தி, தாப்பாய்,வரகுப்பை, அலுந்தலைப்பூர், கல்லக்குடி,ஆலம்பாடி மேட்டூர்,விரகாலூர், திண்ணகுளம்,புதூர் பாளையம்,ஆலம்பாக்கம், கோவாண்டகுறிச்சி, வெங்கடாசலபுரம், புள்ளம்பாடி,இ.வெள்ளனூர்,ந.சங்கேந்தி உள்ளிட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். ஆங்காங்கே பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக மாக வரவேற்பு அளித்தனர்.

இந்த பிரச்சாரத்தின் போது, திமுக ஆட்சியில் மகளிருக்கு இலவச பேருந்து வசதி, மாணவிகளுக்கு உதவித்தொகை ,காலை உணவு திட்டம், விவசாய கடன் தள்ளுபடி, மகளிர் உரிமைத் தொகை என திமுக அரசின் பல்வேறு சாதனைகளை விளக்கி பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


Post a Comment

0 Comments