BREAKING NEWS *** `My TVK' செயலியை அறிமுகம் செய்து தவெக-வின் 2ம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் விஜய் *** தமிழகத்தில் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் !

ஆசிரியர் :


 

தமிழகத்தில் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் !

 தமிழகத்தில் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய விடியா திமுக அரசை கண்டித்து, அதிமுக மாநகர் மாவட்ட கழகம் சார்பில், மாவட்ட கழக செயலாளர் முன்னாள் துணை மேயர் சீனிவாசன் தலைமையில், திருச்சி தென்னூர் சாலையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.



அதிமுக திருச்சி மாநர் மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட கிழக்கு, மேற்கு ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 10 பகுதி கழகங்களில் இந்த மனித சங்கிலி போராட்டமானது நடைபெற்றது.

திருச்சி தென்னூர் சாலையில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு, நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில், பகுதி கழகச் செயலாளர் முஸ்தபா, மாவட்ட துணைச் செயலாளர் வனிதா, திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் வழக்கறிஞர் சேது மாதவன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு திருச்சி மாநகர் மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் ஜெயஸ்ரீ, உள்ளிட்ட அதிமுகவினர் பலர் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments