BREAKING NEWS *** கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற பிகாரை சேர்ந்த பிபின் மஞ்சுவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் சிறையில் அடைக்க திருவள்ளூர் போக்சோ நீதிமன்ற நீதிபதி உத்தரவு *** திருச்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான வழிகாட்டுதல் முகாம் !

ஆசிரியர் :


 

திருச்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான வழிகாட்டுதல் முகாம் !

 திருச்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி மற்றும் ஐக்கிய நல கூட்டமைப்பின் வழிகாட்டி மையம் சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான வழிகாட்டுதல் முகாம் பீமநகர் கீழ கொசத் தெருவில் நடைபெற்றது. 




மகளிர் அணி மாவட்ட தலைவர் பைரோஸ் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் மாவட்ட பொருளாளர் ஆயிஷா, பீமா நகர் கிளை தலைவர் ஜெயராணி,செயலாளர் சாஜிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை மகளிர் அணி மாவட்ட துணைத் தலைவர் ஆயிஷா செய்திருந்தார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளர் பாரூக்,மாவட்ட தலைவர் ஹபீபுர் ரஹ்மான்,மாவட்டச் செயலாளர் சையது ஹக்கீம்,துணைத் தலைவர்கள் உமர் பாரூக் ஹஜ்ரத்,அலாவுதீன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பேராசிரியர் மைதீன்,பொருளாளர் சேக் முகமது கௌஸ்,துணைச் செயலாளர் நியாஸ் அஹமத மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.



Post a Comment

0 Comments