BREAKING NEWS *** டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி; டெல்லி ராஜ் நிவாஸில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார் *** திருச்சி தென்னூர் நடுநிலைப்பள்ளியில் இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள் சிறப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

ஆசிரியர் :


 

திருச்சி தென்னூர் நடுநிலைப்பள்ளியில் இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள் சிறப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.


திருச்சி தென்னூர் நடுநிலைப்பள்ளியில் நல்லோர் வட்டம், புத்தூர் கிளை நூலகம், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள் சிறப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் விமலா வரவேற்றார். திருச்சி நகர வட்டார கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணி தலைமை வகித்தார்.நல்லோர் வட்ட வழிகாட்டு குழு ஒருங்கிணைப்பாளர் நவீலு சுப்பிரமணியம், புத்தூர் கிளை நூலகர் புகழேந்தி, வாசகர் வட்ட தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.




நல்லோர் வட்ட ஒருங்கிணைப்பாளர் பாலு சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், இன்றைய மாணவர்கள் நாளைய சமூகத்தின் அடிநாதம் ஆவார்கள். மாணவர்களே நாட்டின் சொத்துக்கள். அவர்களைப் பேணிக் காப்பதும் நல்வழியில் நடத்துவதும் தலையாய கடமையாகும். மாணவர்களைப் பாதுகாக்கும் போது தான் நாட்டின் எதிர்காலம் சிறப்புப் பெறும். கடந்த காலங்களிலும் எதிர்காலங்களிலும் சமூகத்தைக் கொண்டு செல்கின்ற பொறுப்பினை மாணவர்கள் கொண்டுள்ளனர்.
மாணவர்கள் சிறந்த அறிவுடனும்⸴ திறமையுடனும் வளரும் போது தான் நாட்டின் எதிர்காலம் சிறப்புப் பெறும். மாணவர்கள் இன்சொல் பேசி இனிமையுடன் பழக வேண்டும். உண்மையுடனும் நம்பிக்கையுடையவர்களாகவும் இருத்தல் வேண்டும். மாணவர்கள் நல்ல பண்புகளை பழக்கங்களாக கடைப்பிடித்து நற்பிரஜைகளாக விளங்க வேண்டும்.
மாணவர்கள் கல்வியில் முதல் நிலையில் இருப்பதோடு திறமைகளை வளர்த்துக் கொள்வதும் நற்பண்புகளை வழக்கமாக்கிக் கொள்வதும் தலைமை பண்பை வளர்த்துக் கொள்வதும் கற்கும் காலத்தில் சமூகத்திற்கான பங்களிப்பை அளிப்பதும் அவசியம். இவ்வாறான மாணவர்கள் தலைசிறந்த தலைவர்களாக உருவாவார்கள்என்றார்.

நிறைவாக இடைநிலை ஆசிரியர் லாரன்ஸ் நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments