BREAKING NEWS *** டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி; டெல்லி ராஜ் நிவாஸில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார் *** திருச்சியில் அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் !

ஆசிரியர் :


 

திருச்சியில் அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் !

சொத்து வரியை 150 சதவிகிதம் உயர்த்தியுள்ள தி.மு.க அரசைக் கண்டிக்கும்விதமாக திருச்சியில் அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், திருச்சி ரயில்வே ஜங்ஷன் வழிவிடு முருகன் கோயில் அருகே நடைபெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, பரஞ்சோதி, முன்னாள் எம்.பி குமார் உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.



இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, கடந்த 10 மாத ஆட்சியில் தி.மு.க அரசின் செயல்பாடு, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாதது, பெண்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் பாலியல் கொடுமைகள், சட்டம்-ஒழுங்கு பிரச்னை, சொத்து வரி உயர்வு போன்றவை குறித்துத் தன்னுடைய விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துப் பேசினார். அத்துடன், ``வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலோடு, சட்டமன்றத் தேர்தலும் வரலாம். ஏன்னா, பாரதப் பிரமரே 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்று சொல்லியிருக்கிறார். அதற்கு ஏற்றவாறு மத்திய தேர்தல் ஆணையம், 'ஒரே நேரத்தில் நாடு முழுக்கத் தேர்தல் வைத்தாலும் சந்திக்கத் தயார்' எனச் சொல்லியிருக்கிறது. அப்புறம் 10 நாள்களுக்கு முன்னாடி 'ஒரே நாடு, ஒரே வாக்காளர் பட்டியல் இந்தியா முழுமைக்கும்’ என்ற பத்திரிகைச் செய்திகளைப் பார்த்தேன். அப்படின்னா தேர்தல் வர்றது உறுதியா!" (எனச் சொல்லிவிட்டு எடப்பாடியார் கொஞ்சம் கேப் விட, கூட்டம் ஆர்ப்பரித்தது). ``ஆக ஸ்டாலின் அவர்களே இன்னும் கொஞ்ச நாள் இருக்குது. இந்த நாள்களிலாவது மக்களுக்கு நன்மை செய்யப் பாருங்க. நிச்சயமாக இந்த மக்கள் விரோத ஆட்சிக்கு, மக்கள் விரைவில் முடிவுகட்டுவார்கள்" எனப் பேசினார்.

Post a Comment

0 Comments