BREAKING NEWS *** டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி; டெல்லி ராஜ் நிவாஸில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார் *** தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் போப் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் 7 நாள் சிறப்பு முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையேற்று துவக்கி வைத்தார் !

ஆசிரியர் :


 

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் போப் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் 7 நாள் சிறப்பு முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையேற்று துவக்கி வைத்தார் !

21.03.2022


தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் போப் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் 7 நாள் சிறப்பு முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையேற்று துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.




சாயர்புரம் போப் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சிறப்பு முகாம் 21.03.2022 முதல் 27.03.2022 வரை 7 நாட்கள் சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தன்னூத்து மீனாட்சிப்பட்டியில்  நடைபெற்று வருகிறது. இந்த நாட்டு நலப்பணித் திட்டத்தில் 80 மாணவர்கள் கலந்துகொள்கின்றனர். இந்த சிறப்பு முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள்  (21.03.2022) துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.


அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசும் போது இந்த நாட்டு நலப்பணித் திட்டத்தின் மூலம் இப்பகுதிகளில் உள்ள தேவைகள் மற்றும் பிரச்சனைகளை மாணவர்கள் தெரிந்து கொள்ள முடியும், பணம் எவ்வளவுதான் இருந்தாலும் சரி, பதவி என்னதான் இருந்தாலும் சரி சேவை மட்டும்தான அளவிடமுடியாதது, நானும் படிக்கும்போது என்.எஸ்.எஸ் மாணவனாக இருந்தவன்தான் அதனால்தான் கூறுகிறேன். ஆங்காங்கே நமக்கு கிடைக்கின்ற ஊக்கங்கள்தான் நம் வாழ்கையின் முன்னேற்றத்துக்கு பயனுள்ளதாக இருக்கும், நம் முன்னேற்றத்திற்கு நமது குடும்ப சூழ்நிலை தடையில்லை. முழு ஈடுபாட்டுடன், முழு மனதுடன் விடா முயற்சியுடன் போராடினால் வாழ்க்கையில் நம்மால் நிச்சயம் வெற்றி அடைய முடியும் என்றும், இது போன்று சேவைகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று கூறி தனது சிறப்புரையை நிறைவு செய்தார். 


இந்நிகழ்சியில் போப் கல்லூரி செயலர் தேவசகாயம், முதல்வர் இம்மானுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஆறுமுகம், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர் உட்பட பொதுமக்கள் மற்றும் சாயர்புரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜா, தனிப்பிரிவு தலைமைக் காவலர் மைக்கேல் ராஜா பிரதீஷ் உள்ளிட்ட போலீசார் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments