மதுரை மாவட்டம், மதுரை வளையங்குளத்தில் சுரேஷ் என்பவர் தனக்கு சொந்தமான நிலத்திற்கு பட்டா வாங்க முயற்சி செய்துள்ளார். அவர் பட்டா கேட்டு நில அளவையர் ராமராஜ்(வயது 35), என்பவரை அணுகியுள்ளார்.
அவர் பட்டா ஏற்பாடு செய்ய தர வேண்டும் என்றால் ரூ.5, ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத, சுரேஷ் இது குறித்து மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் அறிவுறுத்தல் படி, ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரம் லஞ்சப் பணத்தை சுரேஷிடம் கொடுத்து லஞ்சம் கேட்ட நில அளவியர் ராமராஜிடம் கொடுக்கும்படி அனுப்பி வைத்தனர். அதன்படி லஞ்ச பணத்தை நில அளவையர் ராமராஜ் பெற்றுக்கொண்ட போது அஙகு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நில அளவையர் ராமராஜை கையும், களவுமாக லஞ்சப் பணத்துடன் பிடித்து, கைது செய்து. அவரிடம் விசாரணை நடந்து வருகின்றனர்.
0 Comments