மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் வெளிப்புறத்தில் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளையின் தலைவர் குருசாமி அவர்கள் தலைமையில் 350 நாட்கள் தொடர்ந்து ஏழை எளிய மக்களின் பசியை போக்கும் வண்ணம் அன்னதானத் திட்டம் நாள்தோறும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது, அதன் ஒரு பகுதியாக இன்று 350 ஆவது நாட்களை கொண்டாட்டும் விதமாக சுமார் 2000க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளையின் தலைவர் குருசாமி அவர்கள் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகரும், இயக்குனரும்மான தருண் கோபி அவர்கள் கலந்து கொண்டு எளிய மக்களுக்கு உணவு மற்றும் பழங்கள் வழங்கினார், மேலும் இந்நிகழ்வில் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளையின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், தொழில் அதிபர்கள் என பலர் கலந்து கொண்டனர்,
0 Comments