BREAKING NEWS *** டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி; டெல்லி ராஜ் நிவாஸில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார் *** ஆட்டோ ஓட்டுனர்களிடம் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கிய சமூக செயற்பாட்டாளர்கள்!

ஆசிரியர் :


 

ஆட்டோ ஓட்டுனர்களிடம் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கிய சமூக செயற்பாட்டாளர்கள்!

 

திருச்சி மாவட்ட சாலை பாதுகாப்பு குழு உறுப்பினரும் சாலை பயனீட்டாளர் நல அறக்கட்டளை நிர்வாக அறங்காவலருமான அய்யாரப்பன் சமூகசெயற்பாட்டாளர்கள் உடன் இணைந்து சாலை பாதுகாப்பு குறித்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் ஆட்டோ ஓட்டுனர்களிடையேயும் பொதுமக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள கண்டோன்மென்ட் புற காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கர்ணன் தலைமை காவலர் பாலசுப்பிரமணியன் முன்னிலையில் மாவட்ட சாலை பாதுகாப்பு குழு உறுப்பினரும் சாலை பயனீட்டாளர் நல அறக்கட்டளை அய்யாரப்பன் தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் மனித விடியல் மோகன், திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், சமூக ஆர்வலர் கோவிந்தசாமி, நவீன்மணி உள்ளிட்டோர் வழங்கினர்.




சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களில் பிரதான சாலையில் இணையும் போது நின்று பிரதான சாலையில் செல்லும் வாகனத்தை கவனித்து பின்னர் செல்லவும். மிதமான வேகம் மிக நன்று. போட்டி போட்டுக் கொண்டு வாகனத்தில் செல்லாதீர். கிராமங்கள் நகரங்களை கடக்கும் போது பாதசாரிகள், விலங்கினங்கள் சாலையை கடப்பதற்கு ஏற்ப எச்சரிக்கையாக வாகனம் ஓட்டவும். மது போதையில் வாகனங்களை இயக்க வேண்டாம். சாலை சந்திப்பு வளைவுகளில் வாகனங்களை நிறுத்த வேண்டாம். சாலை பாதுகாப்பு என்பது வாசகம் அல்ல அது வாழ்வியல் முறை என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாசகங்களை அச்சிட்டும் தேசிய நெடுஞ்சாலை புகார் எண் 1033, பேருந்து தொடர்பான கட்டணம் இல்லா புகார் எண் 149, சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான 48 மணி நேர கட்டணமில்லா சிகிச்சை பெற மருத்துவ துறை கட்டணம் இல்லா சேவை எண் 104, விபத்து மற்றும் அவசர காவல் துறை தொடர்பு எண் 100, 108 உள்ளிட்ட தகவல் அடங்கிய பிரசுரங்களை வழங்கினர்.

Post a Comment

0 Comments