BREAKING NEWS *** டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி; டெல்லி ராஜ் நிவாஸில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார் *** சமூக ஆர்வலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு சிறந்த சமூக சேவைக்கான விருது!

ஆசிரியர் :


 

சமூக ஆர்வலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு சிறந்த சமூக சேவைக்கான விருது!

மயான பூமியில் மனைவி மகளுடன் அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் சமூக ஆர்வலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு சிறந்த சமூக சேவைக்கான விருது!



திருச்சி ஜே.கே.சி.அறக்கட்டளை ஐசிஎப் பேராயம் சர்வ சமய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு மையம் சார்பில் 34 ஆவது ஆண்டு சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறந்த சேவைகளுக்கான விருதுகள் வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது.

ஜே.கே.சி.அறக்கட்டளை நிறுவனத் தலைவர் மற்றும் ஐசிஎப் பேராயத் தலைவர் முனைவர் ஜான் ராஜ்குமார் தலைமையில் திருச்சி புத்தூர் பகுதியில் இல்லத்திலேயே பத்து ஆண்டுகளுக்கு மேலாக அனுதினமும் அன்னதானமும்,
நூற்றுக்கணக்கான புழங்கு பொருட்களை வைத்து புழங்கு பொருட்கள் காட்சியகமும், ஆயிரம் அனாதை பிணங்கள் நல்லடக்க பணியிலும், பத்தாயிரம் நூல்கள் கொண்டு இலவச நூலகமும் மயான பூமியில் மனைவி மகளுடன்அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் சமூக ஆர்வலர் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு சிறந்த சமூக சேவைக்கான விருதினை‌அனைத்து இந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் கே எஸ் சுப்பையா பாண்டியன் வழங்கினார்.

ஜே.கே.சி. அறக்கட்டளை கௌரவத் தலைவர் பேராசிரியர் ரவி சேகர், அருள், நிர்வாக குழு உறுப்பினர் ஆடிட்டர் ரிச்சர்ட், சந்திரசேகரன், விஜிபி குழும திருச்சி தங்கையா, பேராசிரியர் சையத் ஜாகிர் ஹசன், அப்துல் அஜீஸ், நளினி வீரமணி, காயிதே மில்லத், ஆட்டோ ஸ்டீல் சங்கத் தலைவர் ரபீக் அகமது, மாதா மகிமை பறைசாற்று மையத் தலைவர் முனைவர் அசோகன், அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் பிரிட்டோ, அப்துல் கலாம், ராமராஜ், நடராஜன், மூத்த வழக்கறிஞர் செல்வராஜ், மதிகுமார், பால் மாணிக்கம், போதகர்கள் ராஜன், மோகன், ஜெயசீலன், ரமேஷ், எபினேசர், ரஜினி நெகேமியா, ராஜலிங்கம், மாரிமுத்து, ஆரோக்கியசாமி, அலாவுதீன், அலெக்சாண்டர், சகுந்தலா சந்தானகிருஷ்ணன். உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

முன்னதாக ஜேகேசி அறக்கட்டளை மாநில சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ரமேஷ் வரவேற்க, விக்னேஷ் நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments