BREAKING NEWS *** `My TVK' செயலியை அறிமுகம் செய்து தவெக-வின் 2ம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் விஜய் *** கந்துவட்டி கொடுமை - ஜனநாயக சமூக நல கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் கோரிக்கை மனு

ஆசிரியர் :


 

கந்துவட்டி கொடுமை - ஜனநாயக சமூக நல கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் கோரிக்கை மனு

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஜனநாயக சமூக நல கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார் அந்த மனுவில் கூறியிருப்பதாவது.




திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்தவர் அம்ஜித் அலி இவர் வீட்டு மனை மற்றும் வீடு கட்டி விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் இவரது நண்பர் இப்ராஹிம் மூலம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மணப்பாறையை சேர்ந்த கந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் சேகர் என்பவரிடம் 15 லட்சத்தை அம்ஜித் அலி கடன் வாங்கியுள்ளார் இதற்கு மாத மாதம் வட்டியும் கட்டியுள்ளார்.

இந்த கடன் சம்பந்தமாக கடந்த இரண்டாம் தேதி தனது நண்பர் இப்ராஹிம் மூலம் பதிவு செய்யப்பட்ட ஈட்டுக் கடன் கொடுக்கப்பட்டுள்ளது அதன் பின்னர் கடந்த 4-ம் தேதி அன்று தன்னிடம் இருந்த 24 லட்சத்து 80 ஆயிரத்து பறித்துக் கொண்டு மேற்கண்ட ஈட்டுக்கடனை ரத்து செய்யாமல் பணம் கொடுத்த சேகர் மற்றும் முத்து ஆகியோர் அம்ஜித் அலி தாக்கியுள்ளனர். காயமடைந்தவர் திருச்சி அரசு மருத்துவமனையில்  சிகிச்சையும் பெற்றுள்ளார். தாக்குதல் சம்பவம் குறித்து காவல் நிலையத்திலும், காவல்துறை  கண்காணிப்பாளர் அவர்களிடத்திலும்  புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட நபர் கொடுத்த புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை .  ஆகவே இந்த மனுவை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் அவர்கள் விசாரித்து கந்துவட்டி கொடுமைக்கு உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட நபருக்கு உதவும் படி கோரி மனு அளிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments