BREAKING NEWS *** டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி; டெல்லி ராஜ் நிவாஸில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார் *** திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் ''வங்கியியல் மற்றும் நிதியியலில் மின்னியல் மாற்றுரு வாக்கம்'' என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

ஆசிரியர் :


 

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் ''வங்கியியல் மற்றும் நிதியியலில் மின்னியல் மாற்றுரு வாக்கம்'' என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி வணிகவியல் துறை மற்றும் தேசிய பங்குச் சந்தை அகாடமி, மும்பை, இணைந்து  ''வங்கியியல் மற்றும் நிதியியலில் மின்னியல் மாற்றுரு வாக்கம்'' என்ற தலைப்பில்  மார்ச் 23 மற்றும் 24,2022, தேதிகளில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்தியது.இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் நிதியாளர் மற்றும் வணிகவியல் துறை தலைவர் முனைவர். G.ஞானராஜ் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர்.முனைவர். D.பால்தயாபரன் தலைமையுரை வழங்கினார். தேசிய பங்குச் சந்தை அகாடமியின் முதன்மை  செயல் அதிகாரி திரு.அபிலாஷ் மிஷ்ரா அறிமுகவுரை வழங்கினார். 



மேலும், அமெரிக்காவைச் சேர்ந்த முனைவர்.கென்னத் யு.சுக்வுபா, ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த முனைவர்.மேனுவல் பெர்னாண்டஸ், அமெரிக்காவைச் சேர்ந்த முனைவர்.சத்யநாராயன பரயிதம் மற்றும் திருச்சி இந்திய மேலாண்மை நிறுவனத்தின் பேராசிரியர். P.சரவணன் ஆகியோர்  "வங்கியியல் மற்றும் நிதியியலில்  மின்னியல் மாற்றுரு வாக்கம்" குறித்து சிறப்பரை வழங்கினார்கள்.

பெங்களூரைச் சேர்ந்த முனைவர்.ஆனட் கிருஸ்டினாள் என்பவர் கருத்துரை வழங்கினார்.மேலும், பிஷப் ஹீபர் கல்லூரியின் வணிகவியல் பேராசிரியர்.முனைவர் D.ஃபெனலா ஆக்னஸ் ஐலின் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

இந்த அனைத்து நிகழ்வுகளையும் பேராசிரியர்.முனைவர்.ஷீபா ஒருங்கிணைத்தார்.

இந்நிகழ்வில் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது ஆய்வுக்கட்டுரைகளை வாசித்தார்கள்.

Post a Comment

0 Comments