மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் இன்று (12.08.2025) தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் "முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை" பயனாளிகளுக்கு ரேசன் பொருட்களை வழங்கி தொடங்கி வைத்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே.ஜே.பிரவீன் குமார் இ.ஆ.ப., அவர்கள் மதுரை மாவட்டம், மதுரை வடக்கு வட்டம் ஆலத்தூர் கிராமத்தில் உள்ள நியாய விலை கடை மூலம் இன்று(12.08.2025) "முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்" கீழ் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று குடிமை பொருட்களை வழங்கி, தாயுமானவர் திட்ட வாகனங்களின் சேவைகளை தொடங்கி வைத்தார்.
சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆ.வெங்கடேசன் அவர்கள் உடன் உள்ளார்.
0 Comments