தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் இன்று பள்ளிக் கல்வித் துறை சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், துவாக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் 19.65 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசு மாதிரிப் பள்ளிக்கான புதிய கட்டடத்தையும், தரை மற்றும் நான்கு தளங்களுடன் தலா 18.91 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாணவர் மற்றும் மாணவியர்களுக்கான தனித்தனி விடுதிக் கட்டடங்களையும் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து அப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கணினி ஆய்வகத்தை நேரில் பார்வையிட்டு மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடி, குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இந்நிகழ்வில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.இரகுபதி, போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டனர்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, எம்.எம்.அப்துல்லா, துரை வைகோ, சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், தியாகராஜன், பழனியாண்டி, இனிகோ இருதயராஜ், கதிரவன், .அப்துல் சமது, பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி. சந்தர மோகன், இ.ஆ.ப., திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், இ.ஆ.ப., பள்ளிக் கல்வி இயக்குநர் முனைவர் எஸ். கண்ணப்பன், தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலர் திரு.இரா. சுதன்,இ.ஆ.ப.,(ப.நி.) மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
0 Comments