BREAKING NEWS *** டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி; டெல்லி ராஜ் நிவாஸில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார் *** பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா!

ஆசிரியர் :


 

பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா!

திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப்போட்டி மற்றும் சித்திரங்கள் பேசும் சட்டங்களின் சரித்திரம் ஓவியக் கண்காட்சி  திருச்சி ஹோட்டல் ரம்யாஸ் சௌபாக்யா குளிர் அரங்கில்  மூன்று நாட்கள் நடைபெற்றது.




பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவிய போட்டியானது யுகேஜி, எல்.கே.ஜி மாணவர்களுக்கு வண்ணம் தீட்டுதல் பிரிவில் கேம்பியன் பள்ளி யுவின் விராஜ் முதலிடமும், அரபிந்தோ இன்டர்நேஷனல் பள்ளி பூஜா ஸ்ரீ இரண்டாம் இடமும், ராஜாஜி வித்யாலயா பள்ளி இனியன் மூன்றாம் இடமும் பெற்றனர்.


பறவைகள் படம் வரைந்து வண்ணம் தீட்டுதல் பிரிவில் கேந்திர வித்யாலயா பள்ளி  பிருத்திகா முதலிடமும், சந்தானம் வித்யாலயா பள்ளி பிரதன்யா இரண்டாம் இடமும், மகாத்மா காந்தி வித்யாலயா பள்ளி தீக்ஷிதா மூன்றாம் இடமும் பெற்றனர்.


பிறந்த தின விழா கேக் வரைந்து வண்ணம் தீட்டும் பிரிவில் ஆர்.எஸ்.கே பள்ளி லிங்கேஸ்வரர் முதலிடமும், கமலா நிகேதன் பள்ளி தியா கார்த்தி இரண்டாம் இடமும், ஆர்ச்சர்டு பள்ளி மணிஷ் கார்த்திக் மூன்றாம் இடமும் பெற்றனர் 


உணவு பாதுகாப்பு குறித்து படம் வரைந்து வண்ணம் தீட்டும் பிரிவில் தூய ஆண்டனி மேல்நிலைப்பள்ளி ஆண்டனி மரியா சூசை முதலிடமும், எஸ்ஆர்வி சீனியர் செகண்டரி பள்ளி ஜனாலினி இரண்டாம் இடமும், காவேரி மெட்ரிகுலேஷன் பள்ளி சஞ்சிதா மூன்றாம் இடமும் பெற்றனர். 




சித்திரங்கள் பேசும் சட்டங்களின் சரித்திரம் தலைப்பில் நடைபெற்ற 3 நாட்கள் ஓவிய கண்காட்சியில்  33 இளம் ஓவியர்கள் பங்கேற்று இந்திய அரசியலமைப்பு  சட்டங்களை தூரிகை ஓவியத்தில் உயர் பண மதிப்பிழப்பு சட்டம், போக்சோ சட்டம், வன உயிர் பாதுகாப்பு சட்டம், திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டம், பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டம், கல்வி உரிமைச் சட்டம். கையால் துப்புரவு பணி செய்பவர்கள் மற்றும் உலர் கழிப்பறைகள் கட்டுவது தடைச் சட்டம், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு  நலன் சட்டம் என பல்வேறு தலைப்புகளில்  133 ஓவியங்களை காட்சிப்படுத்தினர்.


ஒவிய கண்காட்சியினை மேனாள் நீதி அரசர் கே. சந்துரு துவங்கி வைத்தார். திருச்சிராப்பள்ளி மாவட்ட மூன்றாவது கூடுதல் சார்பு நீதிபதி எம்.மகாலட்சுமி, ஓவியர்  என் எஸ். மனோகர்  ஒவியங்கள் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.

பரிசளிப்பு விழாவில் டிசைன் ஓவியப்பள்ளி தாளாளர் மதன் தலைமை வகித்தார் இயக்குனர் நஸ்ரத் பேகம் துவக்க உரையாற்றினார்

ஓவியப் போட்டியில் பங்கேற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கும் ஒவிய கண்காட்சியில் பங்கேற்ற இளம் ஓவியர்களுக்கும், ஓவியக்கலை பயின்ற ஓவியர்களுக்கும் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ  சான்றிதழும் பரிசுகளையும் வழங்கினார்.


கவிஞர் நந்தலாலா,சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மதிவதனி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். 

 முன்னதாக பொற்கொடி வரவேற்க, அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments